கண்ணீரில் உள்ள குளுக்கோசின் அளவை கண்டறியக்கூடிய ஸ்மார்ட் லென்ஸ்!

Sunday, January 28th, 2018

கண்ணில் அணியக்கூடிய கன்டாக்ட் லென்ஸ்ஸினை பயன்படுத்தி கண்ணீரில் உள்ள குளுக்கோசின் அளவை கண்டறியக்கூடிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்மார்ட் கன்டாக்ட் லென்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் ஊடாக எதிர்காலத்தில் ஊசிகளைப் பயன்படுத்தாக இரத்தத்தில் உள்ள குளுக்கோசு மட்டத்தினையும் கண்டறிய முடியும் என நம்பப்படுகின்றது.

வழமையான ஒளி ஊடுபுகவிடக்கூடியதும், நெகிழ்தன்மை உடையதுமான பதார்த்தத்தினால் இந்த லென்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலதிகமாக சிறிய LED மின்குமிழ் மற்றும் குளுக்கோசு மட்டத்தினை கண்டறியக்கூடிய சென்சார் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் குளுக்கோசு மட்டம் குறிப்பிட்ட அளவினை மீறும்போது LED மின்குமிழ் ஆனது அணைந்து எச்சரிக்கை செய்கின்றது.மேலும் இந்த லென்ஸ் 30 சதவீதம் வரை நெகிழ்வு தன்மை கொண்டதாகவும், 90 சதவீதம் ஒளி ஊடு புக விடக்கூடியதாகவும் இருக்கின்றது.

Related posts: