ஒற்றை இயந்திர விமானத்தில் உலகை வலம்வந்து சாதனை!

ஒரே என்ஜின் கொண்ட விமானம் மூலம் உலகைத் தனியாக சுற்றி வந்த இளம் நபராக ஆஸ்திரேலிய பதின்ம வயதினர் ஒருவர் சாதனை படைத்திருக்கிறார்.
அதற்கு முன்னர் இந்த வரலாற்று சாதனையை படைத்திருந்த அமெரிக்கரை விட ஓராண்டு இளமையானவர் இந்த சாதனையாளர், பதினெட்டு வயதான லேக்லான் ஸ்மார்ட். 15 நாடுகளில் 24 விமானத்தளங்களில் இறங்கி, இந்த பயணத்தை மேற்கொண்ட ஸ்மார்ட், இரண்டு மாதங்களில் அதனை நிறைவு செய்திருக்கிறார்.
தன்னுடைய இந்த துணிகரப் பயணத்தை தொடங்கிய குயின்ஸ்லேண்ட் விமானத் தளத்திலேயே அதனை நிறைவு செய்த இந்த நபர், தனது சொந்த படுக்கையில் நிம்மதியாக தூங்கும் தருணத்தை எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.
Related posts:
பேஸ்புக்கிற்கு போட்டியாக புதிய சமூக வலைத்தளம்!
அமெரிக்காவை தாக்கியது வேற்றுக்கிரகவாசிகளா...?
ஒளியைப் பயன்படுத்தி பிரிண்ட் எடுக்கும் தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் சாதனை!
|
|