ஒரு வேளை உணவுக்காக உலகச் சாம்பியனான உசேன் போல்ட்!

Friday, July 29th, 2016

குட்டி உசேனுக்கு ஓட மட்டும்தான் தெரியும். எங்கே சென்றாலும் ஓட்டமும் சாட்டமும்தான். ஒருநாள் பள்ளிக்கு புறப்படுகிறான் உசேன். லஞ்ச் பேக்கை மறந்து விடுகிறான். வழி நெடுகிலும் ஓட்டம்தான். உசேனை விரட்டிய நாய் தோற்றுப்போய் விடுகிறது. போகிற போக்கில்  கால்பந்து களத்திற்குள் புகுந்து, மின்னல் வேககிக்விடுகிறான் உசேன்.

மீண்டும் பள்ளியை நோக்கி ஓட்டம். பள்ளிக்கருகில்விளையாட்டு பயிற்சியாளர் ஒருவர் மீது மோதி விட்டு நொடியில் மறைந்து விடுகிறான்உசேனின் வேகத்தை பார்த்துவாவ்என மிரண்டு போகிறார் அவர். அவருக்கு ஏதோ  பொறி தட்டுகிறது.

மதிய வேளை. லஞ்சுக்கு பெல் அடித்தகாகி விட்டது. உசேன் பையை பார்க்கிறான். லஞ்ச் பேக் இல்லை. மற்ற குழந்தைகள் சாப்பிடஉசேனுக்கு பசி காதை அடைக்கிறது. காலையில் அவனை பார்த்த கோச், உணவு பேக்குடன் சாப்பிட வருகிறார். உணவு பேக்கைத் திறக்கிறார். உசேன் மூக்கை வாசம் துளைக்கிறது. ஆனாலும் என்ன செய்யபரிதாபமாக ஒரு மூலையில் போய் உட்காருகிறான். 

காலையில் இருந்தே அந்த கோச், உசேனின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார். உசேன் சோர்வுடன் அமர்ந்திருப்பது தெரிகிறது. உசேனிடம் போகிறார் . ”என்ன உசேன் சாப்பாடு கொண்டு வரவில்லையா…” எனக் கேட்கிறார். உசேன் பரிதாபமாக முழிக்கிறான்அப்போது அருகில் நிற்கும் ஓட்டப்பந்தய வீரரைக் காட்டி, ”சரி…  அந்த ஓட்டப்பந்தய வீரரை நீ முந்தி விட்டால், உனக்கு  எனது உணவைத் தருகிறேன்என்கிறார். உசேன் ஒப்புக் கொண்டு அந்த வீரனுடன் ஓடத் தொடங்குகிறான். 

முதலில் உசேனால் முடியவில்லை. திரும்பிப் பார்க்கிறான். அப்போதும் கோச்  உணவைக் காட்டஉற்சாகமாகி உசேன் மீண்டும் ஓடுகிறான். இந்த முறை அவனால் ஜெயிக்க முடிகிறது . கோச், உணவுத் தட்டை அவனை நோக்கி நீட்டுகிறார். இந்தமுறை அவனிடம் ஒரு கேள்வியை கேட்கிறார்.  ”உசேன் நீ ஒரு ஜாம்பவானாக உருவெடுக்க வேண்டுமா அல்லது இந்த உணவுத் தட்டுடன் அடங்கி விடுகிறாயாஎன்கிறார். 

குட்டி உசேனுக்கு அவரது கேள்வி உறுத்துகிறது. உணவைத் திருப்பி கொடுத்து விடுகிறான். மீண்டும் ஓடத் தொடங்குகிறான். ஓடிக்கொண்டேயிருக்கிறான்.

ஒலிம்பிக் சாம்பியன் உசேன் போல்ட்டின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும், ”The boy who learned to fly ”என்று குறும்படத்தின் கதை இது. இந்த அனிமேஷன் குறும்படம்  நிச்சயம் பல குழந்தைகளை கவரும்.

Related posts: