ஒருநாளைக்கு 25 மணித்தியாலம்?
Friday, December 9th, 2016
பூமியின் சுற்றுப்பாதையில் ஏற்பட்டு வரும் மாற்றம் காரணமாக ஒருநாளில் 25 மணித்தியாலங்கள் ஏற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் தற்போது 24 மணித்தியாலங்களாக உள்ள ஒரு நாள் இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் 25 மணி நேரமாக மாற்றம் பெறும்.
அந்தவகையில் கடந்த 27 நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அளவு விரிவடைந்து வருவதாக பிரித்தானியாவின் நடிக்கல் அல்மானக் மற்றும் டர்ஹாம் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்த நிலையில் இந்த இரண்டு மில்லி நொடிகள் என்பது ஒரு நிமிடமாக மாற இன்னும் 6.7 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என கணக்கிடபட்டுள்ளது.
இதேவேளை இவ்வாறான மாறுதலுக்கு சுற்றுசூழலில் ஏற்படும் சில மாற்றங்கள் தான் காரணம் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
றியோ ஒலிம்பிகில் திருமணக் கோரிக்கை!
சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஏன் வெடித்தது? விடை இன்னும் தெரியாதாம்!
விண்வெளி வீரர்களை பாதுகாக்கும் தொழில்நுட்பம்!
|
|
|


