எச்சரிக்கை! Wi-Fi’ குழந்தைகளின் மூளையை பாதிக்கும்?

Thursday, August 11th, 2016

அமெரிக்க அதிபர் தேர்தலில் Green Party சார்பில் அதிபர் வேட்பாளராக களம் காணும் Jill Stein தான் Wi-Fi குறித்த குற்றச்சாட்டை எழுப்பியுள்ளவர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், Wi-Fi-யில் இருந்து வரும் கதிர்வீச்சு உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என்று கூறியுள்ளார்.

அறிவியலால் இதுவரை நிரூபிக்கப்படாத கருத்தை இயற்பியல் அறிஞராக இருந்த ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் வேட்பாளரின் இந்த கருத்திற்கு அறிவியல் அறிஞர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிகாரப்பூர்வமற்ற தகவலொன்றை அதிபர் வேட்பாளர் உறுதிப்பட கூறுவது முறையல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பிரான்ஸை சேர்ந்த பெண் ஒருவருக்கு ‘Wi-Fi’ கதிர்வீச்சால் அலர்ஜி  ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, Wi-Fi கதிர்வீச்சு விவகாரம் பல்வேறு தரப்பிலும் கவனம் பெற்றது.

Wi-Fi போன்ற மின்காந்த புலத்தில் உள்ள மனிதர்களுக்கு தலைசுற்றல், பிரம்மை, தலைவலி, காதுக்குள் இரைச்சல் கேட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்று கூறப்படும் போதிலும் இவை அறிவியல் பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

Related posts: