உலகில் அதிகம் பேர் செல்லும் தீவு!
ஒரு தீவு. அங்கே தான் ஒவ்வொரு நாளும் ஆயிரம் செல்ஃபிக்களுக்கும் மேலாக எடுக்கப்படுகின்றன. எண்ணற்ற திருமண விழாக்கள் நடக்கின்றன. பல பிரியா விடைகள் அளிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு லட்சக் கணக்கில் மனிதர்கள் வந்து போகிறார்கள்.இவ்வளவு ஏன்? நீங்கள் கூட பல முறை அங்கே சென்று வந்திருப்பீர்கள்.
நேற்று நீங்கள் ஏதோ ஒரு டேட்டிங் ஆப்பில் அப்லோட் செய்த படம் கூட இந்தத் தீவில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கலாம். அதன் பெயர் ‘நல் தீவு’ (Null Island).சோகம் என்னவென்றால், அப்படி ஒரு தீவு இந்த உலகத்திலேயே இல்லை. குழப்பிக்கொள்ளும் முன், ஒரு சிறிய கணித விளக்கம்.என்ற வார்த்தையை நாம் கணிதத்தில் அதிகம் பயன்படுத்தி இருப்போம்.
இதற்கு என்ன அர்த்தம்? பலர் இதை ‘0’ வுடன் குழப்பிக் கொள்வார்கள்.ஆனால், உண்மையில் இதற்கும் ‘0’ விற்கும் Null என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. உதாரணமாக உங்களிடம் பணம் ஏதும் இல்லை என்னும் போது அங்கே ‘0’ (பூஜ்யம்) பயன்படுத்தப்படும்.உங்களிடம் பணம் இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியவில்லை என்றால் அங்கே ‘NULL’ பயன்படுத்தப்படும். போதிய தரவு இல்லாத போது,
அந்தத் தரவு பூஜ்யமா இல்லையா என்று தெரியாத போது, ‘NULL’ பயன்பாட்டிற்கு வரும்.ஆனால், சில சமயம் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்கள் ‘NULL’ என்ற விஷயத்தை ‘0’ வுடன் குழப்பிக் கொள்ளும். இதனால் பெரும் குழப்பங்கள் ஏற்படும்.இதில் பிரபலமான ஒரு குழப்பம், நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஏற்படும். நன்றாக ப்ரோக்ராம் செய்யப்படாத ஆப்கள் நீங்கள் போட்டோ அப்லோட் செய்யும் போது உங்களுக்கே தெரியாமல் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தும்.நீங்கள் ‘Location’ ஆன் செய்யாமல் ஒரு புகைப்படமோ அல்லது ஒரு நிலைத் தகவலோ பதிவு செய்யும் போது, ‘Location’ குறித்த டேட்டா இல்லாததால், நீங்கள் (0கு, 0கு) என்ற லோகேஷனில் இருப்பதாக எடுத்துக் கொள்கிறது.சரியாகத் தானே செய்கிறது? நான் தான் லோகேஷன் ஆன் செய்யவில்லையே?” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், பூமியைப் பொறுத்தவரை (0கு, 0கு) என்பதும் ஒரு லோகேஷன் குறித்த டேட்டா தான். அது தான் பூமியின் மையப் பகுதி (Center of the earth).அந்த இடத்திற்கு என்று நிறையப் பின்கதைகளும் உண்டு. என்ற இடத்தில் தான் அட்சரேகையான பூமத்திய ரேகையும் (Equator),
தீர்க்கரேகையான ப்ரைம் மெரிடியன் ரேகையும் (Prime Meridian) சந்திக்கின்றன.இந்த இடம் சரியாக ஆப்பிரிக்காவிற்கு மேற்கில், கினியா வளைகுடாவில், கிழக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் வருகிறது. நடுக்கடலான இந்த இடத்தில் இருப்பது வானிலையைக் கண்டறிய உதவும் ஒரு மிதவை (Weather Buoy) மட்டுமே.0கு, 0கு) என்று இந்த இடத்தை, வரைபடங்களில் குறிப்பிடுவதாலும், இதனால் அவ்வப்போது ஏற்படும் குழப்பங்களை தவிர்க்கவும், இந்த இடத்தை ‘Null Island’ என்று அழைக்கின்றனர்.
நீங்கள் லோகேஷன் ஆன் செய்யாமல் அப்லோட் செய்யும் விஷயங்கள் பல இங்கே இருந்து நீங்கள் அப்லோட் செய்ததாக தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிரபலமான ஆப்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்த பிரச்சினை ஏற்படுவது இல்லை. கடனே என்று ப்ரோக்ராம் செய்யப்பட்ட ஆப்கள் (பல உண்டு) அனைத்தும் உங்களை நல் தீவில் இருப்பது போல் காட்டி குழப்பம் ஏற்படுத்துகின்றன.2012ம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலின் போது விஸ்கான்ஸின் என்ற இடத்தில் சென்சஸ் முறையாக எடுக்கப்படாததால் ஒரு குழப்பம் ஏற்பட்டது.பலருக்கு அவர்களின் லோகேஷன் குறித்த டேட்டா எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் அந்த வாக்காளர்கள் அனைவரும் நல் தீவில் (0கு, 0கு) இருப்பதாக கம்ப்யூட்டர் புரிந்து கொண்டது.அதாவது அவர்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு வெளியே இருப்பதாகப் பதிவு செய்து கொண்டது. கடைசி நேரத்தில் இதைக் கண்டறிந்து சரி செய்துள்ளனர்.
சரி, இந்த ‘NULL’ தீவிற்கு உண்மையாகவே சென்று ஒரு செல்ஃபி எடுத்தால் எப்படி இருக்கும்? நிறையப் பேர் சென்று நிஜமாகவே படங்கள் எல்லாம் எடுத்திருக்கிறார்கள்.பலர் அதை எதேச்சையாக கடந்து செல்லும் போது அதைப் பற்றி அறிந்து கொண்டு படகை நிறுத்தி படங்கள் எடுத்திருக்கிறார்கள்.அதற்கு ஒரு சிறந்த, அனுபவம் நிறைந்த வழிகாட்டி ஒருவர் உடன் வர வேண்டும். அப்போதும் உறுதியாக இலக்கை அடைவோம் என்று சொல்லிவிட முடியாது.ஆனால், அங்கே நீங்கள் எப்போது சென்றாலும், உங்களை வரவேற்க அந்த Weather Buoy காத்திருக்கும் மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்.
Related posts:
|
|
|


