உலகிலேயே மிக விலையுயர்ந்த கணினியை அப்பிள் நிறுவனம் வெளியிட்டது!

அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமான அப்பிள் நிறுவனம் உலகிலேயே மிக விலையுயர்ந்த கணினியை விற்பனைக்காக வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் கணினிசார் மாநாட்டின் போது ஐமெக் ப்ரோ (IMac Pro) என்ற இந்த கணினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அப்பிள் நிறுவனம் இதுவரை தயாரிக்கப்பட்ட கணினிகளில் இது வேகமானதும் அதிசக்தி வாய்ந்ததும் என்று கூறியுள்ளது. மேலும் இந் நிறுவனமானது ஐமெக் ப்ரோவின் முழுமையான தொகுதியை 13 ஆயிரம் டொலருக்கு விற்பனை செய்யவுள்ளது. எனினும் இதன் அடிப்படைத் தொகுதியை ஐயாயிரம் டொலர்களுக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தக் கணினி சிபியு, திரை என்பன உள்ளடங்கலாக 27 அங்குல 5கே தொழில்நுட்பத் திரையுடன் கிடைக்கும் 18 கோர் ஸியோன் ப்ரொஸெஸரைக் (Sion Prosser) கொண்டது. இதன் கிராபிக் (Graphic) திறன், 22 டெராப்ளொப்ஸ் (Terahplops) ஆகும்.
ஐமெக் ப்ரோவானது முப்பரிமாண காட்சியமைப்பு, வீடியோ எடிட்டிங், வேர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual reality) போன்ற வேலைகளுக்கு மிகப் பொருத்தமானது என அப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related posts:
|
|