உலகின் ஆழமான குகையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!

Sunday, December 25th, 2016

நுண்ணுயிர் வகைகளுள் அடங்கும் பக்டீரியாக்களில் மனிதர்களுக்கு நன்மை பயக்குபவையும் உண்டு, தீமை பயக்குபவையும் உண்டு.

பல்வேறு இனங்களைக் கொண்ட பக்டீரியாக்கள் பல மில்லியன் வருடங்களுக்கு முன்னரே இவ் உலகில் தோன்றியவையாகும்.

இப்படியிருக்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிராத Paenibacillus இனப் பக்டீரியாக்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நான்கு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படும் இந்த பக்டீரியாக்கள் உலகின் மிகவும் ஆழமான குகை ஒன்றினுள் காணப்பட்டுள்ளன.

குறித்த குகையானது நியூ மெக்சிக்கோவில் உள்ள Lechuguilla எனும் 305 மீற்றர்கள் ஆழமான குகையினுள்ளேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஓகியோவிலுள்ள Akron பல்கலைக்கழகம் மற்றும் கனடாவிலுள்ள McMaster பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியிலேயே 4 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே இப் பூமியிலிருந்து மறைந்துவிட்டதாக கருதப்பட்ட குறித்த பக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இப் பக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தி தற்போது காணப்படும் எந்தவொரு நுண்ணுயிர்க்கொல்லிகளுக்கும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

new-athos-cave-abkhazia-georgia-iverian-mountain-caucasus-mountains-1

Related posts: