உயிர் பிரியும்  தருவாயில் நண்பனை காணத்துடித்த குரங்கு!

Friday, October 20th, 2017

தன்னுடன் பல வருடங்கள் பழகிய நபரை பார்க்காத ஏக்கத்தில் சாப்பிடாமல் இருந்த மனிதக்குரங்கு அவரை பார்த்த தருணத்தில் அன்பாக செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்தில் ராயல் பர்கர்ஸ் என்ற பெயரில் மிருகக்காட்சிசாலை ஒன்று அமைந்துள்ளது, அங்கு மாமா (59) என்ற மனிதக்குரங்கு இருந்தது.

வயதுமுதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த குரங்கு எந்நேரத்திலும் உயிரிழக்கலாம் என்ற நிலையில் இருந்துள்ளது. இந்த சமயத்தில் மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் உணவு, தண்ணீர் என எது கொடுத்தாலும் குரங்கு சாப்பிட மறுத்துள்ளது.

தன்னை வளர்த்த Jan van Hooff என்ற நபரை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்திலேயே குரங்கு எதுவும் சாப்பிடாமல் தனது உயிரை கையில் பிடித்து வைத்து கொண்டு இருந்துள்ளது. இது குறித்து Hooff-க்கு தகவல் தெரிவிக்கப்பட மாமா இருக்கும் இடத்துக்கு அவர் வெளியூரிலிருந்து வந்துள்ளார். Hooff-ஐ பார்த்த மாமா குரங்கு அவரின் தலை மற்றும் முகத்தின் மீது தனது கையால் வருடி தனது நீண்ட நாள் நண்பனை மீண்டும் பார்த்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

Hooff-ம் நெகிழ்ச்சியோடு குரங்கை தடவி கொடுத்தார், இருவருக்குமான தொடர்பு கடந்த 1972-லிருந்து இருந்துள்ளது.இந்த நெகிழ்ச்சி சந்திப்பு நடந்த அடுத்த வாரத்திலேயே குரங்கு உயிரிழந்து விட்டது. இந்த சம்பவம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடந்துள்ளது.

1957-ல் பிறந்த மாமா குரங்கு உயிரிக்கும் சமயத்தில் ராயல் பர்கர்ஸ் மிருககாட்சி சாலையில் இருந்த மிக வயதான குரங்கு என்ற பெயரை பெற்றிருந்தது.மாமா உயிரிழந்த போது அங்கிருந்த மற்ற குரங்குகள் அதற்கு பிரியாவிடை கொடுத்த தருணம் காண்போரின் கண்களை குளமாக்கியது

625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts: