ஈக்குவடோரில் ஏழு பேரை காப்பாற்றிவிட்டு இறந்தபோன நாய்!

Wednesday, April 27th, 2016

ஈக்­கு­வ­டோரை அண்­மையில் தாக்­கிய பூமி­ய­திர்ச்­சியின் போது 7 பேரின் உயிரைக் காப்­பாற்ற உத­விய நாயொன்று மேற்­படி மீட்புப் பணியில் அய­ராது பங்கு பற்­றி­ய­தை­ய­டுத்து, கடும் சோர்வு கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

இந்த பூமி­ய­திர்ச்­சியில் சிக்கி 654 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் காய­ம­டைந்­தி­ருந்­தனர்.

டேகோ என்ற மேற்­படி 4 வயது நாய் வட மேற்கு மாகா­ண­மான மனா­பியில் பெடெர்­னாலெஸ் எனும் இடத்தில் பூமி­ய­திர்ச்சி இடி­பா­டு­களின் கீழ் புதை­யுண்­டி­ருந்­த­வர்­களை மீட்கும் மீட்புப் பணி­யா­ளர்­களின் பணிக்கு உதவி வந்­துள்­ளது.
அந்த நாய் இடி­பா­டு­களின் சிக்­கி­யி­ருந்த 7 பேரை தனது மோப்ப சக்­தியின் மூலம் கண்­ட­றிந்து அவர்­களை காப்­பாற்ற உத­வி­யுள்­ளது.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது வெப்பம் மற்றும் வரட்சி காரணமாக அந்த நாய் உயிரிழந்துள்ளது.

Related posts: