இலங்கையில் மிக வேகமாக அழிந்துவரும் பேரபாயத்தில் வீட்டுக் குருவி இனம்!

Friday, December 11th, 2020

கடந்த காலங்களில் வீடுகளில் கூடுகட்டி வாழ்ந்த வீட்டுக் குருவி இனம் (house sparrow) தற்போது மிக வேகமாக அழிந்து வருவதாக சுற்றாடல் மற்றும் ஜீவகாருண்ய அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.

மனிதர்களோடு மனிதர்களாக வீட்டுக் கூரைகளில் வாழ்ந்து வீடுகளுக்கு வசந்தத்தை கொண்டு வந்த இந்த வீட்டுக் குருவி இனம் தற்போது வீடுகளில் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இலங்கையில் இருந்து முற்றாக அழிந்து விடும் அபாயம் நிலவுவதாக சுற்றாடல் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

நவீன பயிர்ச் செய்கை முறைமையும் இரசாயன பூச்சி கொல்லி மற்றும் கிருமிநாசினி பாவனைகள் அதிகரித்தமையே இதற்கான காரணமாகும்.

இரசாயன பதார்த்தங்கள் சேர்க்கப்பட்ட விதைகள், பயிர்கள் வளர்ந்த பின் பயிர்களுக்கு தெளிக்கப்படும் பூச்சி மருந்துகள், வளர்ந்த பயிர்களின் பூக்கள் இலை விதைகளை உணவாக கொண்டமையினால் இவை அழிவடைந்துள்ளதாகவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related posts: