ஆழ்துளை கிணற்றில் இறங்கிய சிறுமியின் துணிச்சல்!

Friday, November 4th, 2016

ரஷ்யாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தையை காப்பாற்ற 17 வயது சிறுமி உள்ளே இறங்கி காப்பாற்றிய சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரஷ்யாவில் 2 வயது குழந்தை ஒன்று எதிர்பாராத விதாமாக ஆழ்துளை கிணற்றில் விழந்துள்ளது. இதை அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சிடைந்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் குழந்தையை காப்பாற்றுவதற்காக அருகில் பள்ளம் எடுத்து காப்பாற்ற முயற்சி செய்தும் அது பலன் அளிக்கவில்லை.இதன் காரணமாக தீயணைப்பு படையினர் அருகில் இருந்த 17 வயது சிறுமியை ஆழ்துளை கிணற்றுக்குள் இறக்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.

அதன் பின் முதன் முறையாக ஆழ்துளை கிணற்றுக்குள் சிறுமி இறக்கப்பட்ட சில நிமிடங்களில் மூச்சுத்திணறல் காரணமாக, மேலே கொண்டு வரப்பட்டார். அதைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் அச்சிறுமி உள்ளே இறக்கப்பட்டார்.

ஆனால் இம்முறை அச்சிறுமி, ஆழ்துளை கிணற்றில் சிக்கித் தவித்த 2 வயது குழந்தையை மேலே தூக்கி கொண்டுவந்து மீட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் அடங்கிய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

saina(1) copy

Related posts: