ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆதரவாக அயர்லாந்து அரசு!
Saturday, September 3rd, 2016
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் பில்லியன் கணக்கான டாலர்களை வரியாக செலுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையம் விதித்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அயர்லாந்தின் கூட்டணி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வரும் புதன்கிழமை அன்று, இந்த மேல்முறையீட்டிற்கு பாராளுமன்ற ஒப்புதல் பெறப்படும் என்று அரசாங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டிச்சந்தைகளுக்கான ஆணையர் மார்கிரெய்டே வெஸ்டெயர், ஆப்பிள் நிறுவனத்துக்கான வரி விதிப்பு முறைகள் மூலம் சட்டவிரோதமாக அரசு உதவிகளை பெற்றதாக தீர்மானித்த பின்னர் அந்த தொகையை வசூலிக்க கோரி அயர்லாந்து குடியரசுக்கு உத்தரவிட்டார்.
ஒரு பக்கம், நாட்டின் வரி விதிப்பு முறை, பன்னாட்டு நிறுவனங்களை தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு உதவும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், இன்னொரு பிரிவினர், ஆப்பிள் நிறுவனத்திடம் வரியை வசூலித்தே தீர வேண்டும் என்கிறார்கள். அயர்லாந்து அரசு இந்த இரு தரப்புக்கும் இடையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

Related posts:
|
|
|


