அமெரிக்க விஞ்ஞானிகளால் காலவரையின்றி மீள்சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் கண்டுபிடிப்பு!

Tuesday, May 1st, 2018

அமெரிக்க விஞ்ஞானிகள் காலவரையின்றி முழுவதும் மீள்சுழற்சி செய்யக்கூடிய வகையிலான புதிய பிளாஸ்டிக்கை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மனிதனின் அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம், அவற்றின் விலை மலிவாக இருப்பதனாலும் அதன் நிறை குறைவு மற்றும் நீடித்துஉழைப்பதுமாகும்.  ஆனால், உலக அளவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கும் இதுவே முக்கிய காரணமாகியுள்ளது. மலைபோல் குவிந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு சுற்றுச் சூழல்சீர்கேடுகளை உருவாக்கி உயிரினங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் எத்தனை முறை வேண்டுமானாலும் முழுவதும் மீள்சுழற்சி செய்து பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கண்டறிந்தது சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியைஏற்படுத்தியுள்ளது.

காலவரையின்றி மீள்சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிகிலும் இலகுவான எடை, வெப்பத்தை தடுப்பது, வலிமை மற்றும் நீடித்து உழைப்பது உள்ளிட்ட பல முக்கிய பண்புகள் உள்ளன. இதனால்,வழக்கமாக உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக்கை போன்றை இதனையும் பயன்படுத்த முடியும். இதனை மீள் சுழற்சி செய்யும் போது நச்சு ரசாயனங்களை பயன்படுத்த தேவையில்லை என்பதுடன்தீவிரமான ஆய்வக நடைமுறைகளை கடைபிடிக்கத் தேவையில்லை என்று அமெரிக்காவின் கொலரோடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts: