O/L மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகம் விரைவில்!

இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகப்பணி எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
இது வரையில் 90 சதவீதமான விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும் வழமையாக வருடத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக 350 000 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை - ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை!
முகக்கவசத்தின் ஊடாக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் - இலங்கை சுவாச நோய் தொடர்பான...
மே 17 இல் தேசிய பாதுகாப்பு மாநாடு !
|
|