M.P களுக்கு கார் கொள்வனவு செய்ய ஒரு கோடி ரூபா கடன்!
Sunday, August 7th, 2016
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கார் கொள்வனவுக்காக சலுகை வட்டி அடிப்படையில் ஒரு கோடி ரூபா கடன் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 100 லட்சம் ரூபா கடன் வழங்குமாறு நிதி அமைச்சர், அரச வங்கிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எவ்ளவு வட்டி வீதம் என அறிவிக்கப்படாத போதிலும் 4 வீத வட்டியில் கடன் வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வங்கி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வளவு வட்டி வீதத்திற்கு கடன் வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து அறிவிக்குமாறு நிதி அமைச்சிடம் அரச வங்கி பிரதானிகள் கோரிக்கை விடுக்கவுள்ளனர்
Related posts:
வடபகுதிக்கான புகையிரத சேவை பாதிப்பு! போக்குவரத்து பாதிப்பு!
பெண்களின் ஒளிப்படங்கள் தவறான பார்வையில் சித்தரிப்பு – வீடு புகுந்த 50 இற்கும் அதிகமானோர் தாக்குதல் -...
ஜே.ஆரின் மருமகன் யார் ? - ரணிலா? அனுரவா? - விமல் வீரவங்சவுக்கு ஏற்பட்ட சந்தேகம்!
|
|
|


