GST வருமானம் 91,916 கோடி!
Thursday, October 3rd, 2019
கடந்த செப்டம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வருவாய் 91,916 கோடி ரூபாயாக உள்ளது.
இதுதான் இந்த நிதி ஆண்டின் மிக குறைந்த ஜி.எஸ்.டி. வருவாய் ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் 98,202 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வருவாயுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு 2.67 சதவீதம் குறைந்துள்ளது.
மொத்த ஜி.எஸ்.டி. வருவாயில் மத்திய ஜி.எஸ்.டி. 16,630 கோடி, மாநில ஜி.எஸ்.டி. 22,598 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. 45,069 கோடி, இறக்குமதி மீதான கூடுதல் வரி 7,620 கோடி என மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கையில் அறிமுகமாகும் நவீன புகையிரதம்!
நுவரெலியாவாக மாறிய யாழ்ப்பாணம்.!
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் போலித்தனம் அம்பலமாகியுள்ளது – அமைச...
|
|
|


