A/L மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!
Sunday, July 8th, 2018
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பரீட்சைத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளன.
இந்தப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் மூன்று லட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரபல சட்டத்தரணி செலஸ்ரின் ஸ்ரனிஸ்லஸ் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைவு!
அரச சேவை கட்டியெழுப்பப்படும் - அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார!
பாரிய நிலநடுக்கம் குறித்த ஊகங்களால் அச்சமடைய வேண்டாம் - புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவ...
|
|
|


