A/L பரீட்சை இன்றுடன் நிறைவு!

ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவக்கு வருகின்றது.
குறித்த பரீட்சையில் மொத்தமாக 3 இலட்சத்து 15 ஆயிரத்து 227 பரீட்சாத்திகள் பங்குகொண்டனர் என பரீட்சைத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்றைய தினத்தில் பரீட்சைகள் நிறைவுபெற்றதன் பின்னர் பரீட்சை நிலைய வளாகங்களில் அமைதியற்ற முறையில் செயல்படுகின்ற மாணவர்களை கைது செய்யுமாறு காவல் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு கைதுசெய்யப்படுகின்ற மாணவர்களின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இரத்துசெய்யப்படலாம் எனவும் பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்...
“ஸ்ரீலங்காஸ் ஈஸ்டர் போம்பிங் டிஸ்பெச்சஸ்” - வெளியானது ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான ஆவணப்படம்!
வடக்கில் கண் சுகாதாரம் தொடர்பில் ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்!
|
|