7 மாதத்தில் 154 யானைகள் பலி!
Wednesday, August 15th, 2018
நடப்பாண்டின் முதல் 7 மாதத்தில் மாத்திரம் 154 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு திணைக்களத்தின் யானை புள்ளிவிபர பிரிவின் பிரதி பணிப்பாளர் யூ.எல். தௌபிக் தெரிவித்துள்ளார்.
யானைகளுக்காக வைக்கப்படும் ஹக்கபடாஸை உண்ணுவதால் அதிகளவான யானைகள் உயிரிழந்துள்ளன.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலேயே அதிகப்படியான யானை மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 50 முதல் 60 வயதுக்கிடைப்பட்டவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
கடும் காற்று வீசக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
நீர் மின் உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம்!
நயினாதீவு அம்மன் விவகாரம் தொடர்பிழல் பிரதமரின் அவசர உத்தரவையடுத்து தொடர்புடைய படையினரிடம் விசாரணை!
|
|
|


