60 மருந்துப் பொருட்களின் சில்லறை விலையை குறைக்க அமைச்சரவை அனுமதி – சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Wednesday, June 7th, 2023
60 ஒளடதங்களின், ஆகக்குறைந்த சில்லறை விலையை, 16 சதவீதத்தால் குறைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விலை குறைப்பு எதிர்வரும் 15 ஆம் திகதிமுதல் அமுலாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒளடத விலை திருத்தம், மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஐந்து வீரர்களின் தகுதி நீக்க விவகாரத்தில் தலையிட மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியது மகாஜனா!
முழு உறுப்புரிமையை மீண்டும் பெற்றது இலங்கை !
பிரதேச சபை எல்லைகளிலுள்ள நகரப் பிரதேசங்களை அடையாளங் காணும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக...
|
|
|


