6 கோரிக்கைகளை முன்வைத்து போராடத் தயாராகும் ஆசிரியர் சேவை சங்கம் !
Thursday, January 23rd, 2020
ஊதியப் பிரச்சினை உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து, ஆசிரியர் மற்றும் அதிபர்கள் அடுத்த மாதம் மூன்றாம் திகதியின் பின்னர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு தனியான வேதன திட்டத்தை தயாரிப்பதற்கும், அதுவரையில் இடைக்கால வேதனத்தை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த வேதனத்தை அடுத்த மாதம் மூன்றாம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இல்லாவிட்டால், பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கததின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக இன்றும் மழை!
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 2000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு - நீர் ...
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு கடுமையான சட்டம் - கடற்றொழில் இர...
|
|
|


