500 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு – கைத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!
 Saturday, August 7th, 2021
        
                    Saturday, August 7th, 2021
            
500 இலங்கை தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் வேலைவாய்ப்புக்கள் குறித்து பத்திரிகைகளில் விளம்பரமொன்று வெளியிடப்பட்டுள்ளதுடன், தகுதியான தொழிலாளர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொரிய அரசாங்கம் இலங்கைக்கு 4 ஆயிரத்து 500 வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
தற்போதைய கோவிட் தொற்றுநோய் காரணமாக, கொரிய அரசாங்கம் வெளிநாட்டவர்கள் வருகைக்கு முற்றாக தடை விதித்துள்ளதால், அந்நாட்டில் வெளிநாட்டவர்களை வரவழைப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தடை நீக்கப்பட்டதும் இலங்கை தொழிலாளர்களை கொரியாவுக்கு வேலை வாய்ப்புகளுக்காக அனுப்ப முடியும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        