5 உடன்படிக்கைகள் சிங்கப்பூருடன் கைச்சாத்து!

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியேங் லுன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சிங்கப்பூர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது சிங்கப்பூர் பிரதமர், ஜனாதிபதி டொனி வேன் ஆகியோருடன் இருத்தரப்பு முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முக்கியமான 5 உடன்படிக்கைகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை, கலாச்சார நிகழ்ச்சி பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, அரச ஊழியர்களின் திறமையை அதிகரிப்பது சம்பந்தமான உடன்படிக்கை, மேல் மாகாண பெருநகர அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, தொழிற்கல்வி தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஆகியன இங்கு கைச்சாத்திடப்பட்டன.
Related posts:
யாழ்ப்பாணத்திலும் தீவிரமடையும் கொரோனா - 10 வயது சிறுமியும் பாதிப்பு – வடக்கின் பல பகுதிகளிலும் எச்ச...
ஏப்ரல் மாத இறுதிக்குள் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு வெளியாகும் - கல்வி அமைச்சர் பீரிஸ்!
டயகம சிறுமி மரணம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் விசாரணை - சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு!
|
|