40 ஆயிரம் ஆசிரியர்களை புதிதாக இணைக்கத் திட்டம் -கல்வி அமைச்சர் !

ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளை அடையாளம் கண்டு ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்படவதோடு எதிர்வரும் இரண்டு வருடத்திற்குள் 40 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டியில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து காண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டின் ஜீவநாடி சிறுவர் சமூகத்தினர் ஆவர். எதிர்வரும் 2 வருட காலப்பகுதியில் சிறுவர் சமூகத்தினர் மத்தியில் எண்ணங்களின் தரத்தை மேம்படுத்தவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.. நாட்டின் அபிவிருத்தியை மேம்படுத்துவதில் சிறுவர்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்ளும் போது அவர்களது பாடங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|