36,000 மெற்றிக் தொன் டிஎஸ்பி உரத்துடன் கப்பல் நாட்டுக்கு வருகை – விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கவும் நடவடிக்கை என விவசாய அமைச்சர் அறிவிப்பு!

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள 36,000 மெற்றிக் தொன் டிஎஸ்பி உரத்துடன் கப்பலொன்று, நேற்று நாட்டை வந்தடைந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விரைவில், மேலும் 36,000 மெற்றிக் தொன் டி.எஸ்.பி உரத்துடன் கப்பலொன்று நாட்டுக்கு வரவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மூன்று போகங்களுக்கு பின்னர் முதல் தடவையாக விவசாயிகளுக்கு டிஎஸ்பி உரம் கிடைத்துள்ளது. மேற்படி உரத்தை தாங்கிய MV INCE PACIFIC கப்பல் நேற்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் உணவு,விவசாய அமைப்பு மற்றும் USAID நிறுவனங்களின் பங்களிப்புடன் மேற்படி டிஎஸ்பி உரம் பெறப்பட்டுள்ளது. 2022,2023 பெரும் போகத்தில் நெல் பயிர்ச்செய்கையை மேற்கொண்டோர், மற்றும் இந்த வருடத்தில் சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டோர், ஈடுபடாதோருக்கும் இந்த உரம் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த வகையில் விவசாய திணைக்களத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விதத்தில், ஒரு ஹெக்டயாருக்கு 55 கிலோ கிராம் டிஎஸ்பி உரத்தை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|