30,000 மெட்ரிக் தொன் உலை எண்ணெய் அடங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையும் – புதிய வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு!

30,000 மெட்ரிக் டன் உலை எண்ணெய் (Furnace Oil) அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த உலை எண்ணெய் அனைத்தும் மின் உற்பத்திக்கு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என புதிய வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
மூன்று மாத காலப்பகுதிக்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் - அமைச்சர் மஹிந்த அமரவீர!
தேர்தலில் வாக்களிக்கும் போது ஒரு புள்ளடியை மாத்திரம் இடுதல் வேண்டும்!
யாழ்.கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேர் மீது நடவடிக்கை ?
|
|