30 வீடுகள் மீதொட்டமுல்ல மக்களுக்கு கையளிப்பு – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!
Saturday, April 22nd, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்தமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் 30 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வீட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 50 ஆயிரம் ரூபா நிதியுதவியும் இதன்போது வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளை பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது
Related posts:
யாழ்.பொதுநூலகத்தில் கம்பீரத்துடன் அப்துல் கலாம்!
யுத்தத்திற்கு பின்னர் 1,30 000 க்கும் அதிகமானவர்கள் மீள்குடியேற்றம்!
மகாபொல பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிப்பு!
|
|
|


