27 பவுண் நகை வடமராட்சி துணிகர திருட்டு!

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தெற்கு பகுதியில் நேற்று அதிகாலை தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த துணிகரத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட் டிலிருந்தவர்கள் வழமை போன்று காலை எழுந்து சுவாமி அறைக்குள் சென்ற போதே மேற்படி திருட்டு இடம்பெற்றது தெரியவந்துள்ளது.
கொள்ளையர்கள், வீட்டின் சுவாமி அறையின் பின்பக்க யன்னலின் கம்பியை வளைத்து உள்நுழைந்தே அறையில் இருந்த சுமார் 14 லட்சம் பெறுமதியான 27 பவுண் நகைகளை கொள்ளையிட்டுள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற போது வீட்டிலிருந்தவர்கள் ஏனைய அறைகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர்.இக் கொள்ளை சம்பவம் தொடர்பாக தடயவியல் பிரிவு பொலிஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டனர்.
Related posts:
இலங்கை - சீனா இடையில் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்திக்கொள்ள தீர்மானம்!
பரீட்சையில் திறமை சித்திகளுடன் சித்தியெத்திய மாணவர்களுக்கு நேர்முக பரீட்சை!
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் மறு அறிவித்தலிவரை மூடுவதற்கு...
|
|
மத்திய வங்கி மோசடி விவகாரம் - மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அ...
100,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொள்வனவுக்கான ஒப்பந்தத்தில் லிட்ரோ கைச்சாத்து – 70 வீத எரிவாயுவை வீட்ட...
இலங்கையில் போதைக்கு அடிமையாகும் இளம் பெண்கள் - பின்னணியில் உள்ள அழகு நிலையங்கள் உள்ளதாக தேசிய அபாயகர...