27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது 22 ஆவது திருத்த சட்டமூலம் – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
Monday, July 25th, 2022
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டு கடந்த 2 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.
இந்த திருத்தத்தின் மூலம் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் புதிய நியமனங்கள் மற்றும் அந்த நியமனங்களில் மாற்றங்களைச் செய்வதற்கு முன்னர் பிரதமருடன் ஜனாதிபதி கலந்தாலோசிக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, பிரதமர் மீது நாடாளுமன்றம் நம்பிக்கை இழந்தால், பிரதமரை இந்த திருத்தத்தின் ஊடாக நீக்குவதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடிப்போரை பிடியுங்கள் பாதுகாப்பு பிரிவினருக்கு அமைச்சர் உத்தரவு!
அமெரிக்கா ஆதரவின்றி பத்திரிகையாளர் கசோகி கொலை நடந்திருக்காது - ஈரான் அதிபர் !
நாட்டின் எதிர்கால சொத்தான சிறார்களின் அறிவை மேம்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு - சிறுவர் தின வாழ்த்...
|
|
|


