24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசியை இலவசமாக வழங்க தீர்மானம்
Friday, May 10th, 2024
இலங்கையிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசியை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்திற்கமைய இந்ந நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேவேளை அண்மைக்காலமாக அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றது எனவும், அவை பணத்திற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களுக்கு, முன்னர் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...
பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான செயற்பாட்டுத் திட்டம் நாடு முழுவதும் முன்னெடுப்பு!
மக்களின் அரிசி நுகர்வு குறைந்ததால் கால்நடை தீவனத்திற்கு அரிசி விற்பனை - நுகர்வோர் சேவை அதிகார சபை தீ...
|
|
|


