21 ஆவது திருத்தம் தொடர்பான இறுதி கலந்துரையாடல் நாளை !

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் நாளை (03) கலந்துரையாடப்படவுள்ளது.
அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று விளக்கமளித்துள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் காலை 10.00 மணிக்கு நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இது தொடர்பில் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு சபாநாயகரிடம்!
“சைனோபாம்” இரண்டாவது தொகுதி தடுப்பூசிகளை இன்றுமுதல் வழங்க நடவடிக்கை – சுகாதார தரப்பினருக்கு ஜனாதிபதி...
மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!
|
|