2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி – எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி மாலை 06.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்துவதற்கும் தீர்மானம்!
Monday, November 13th, 2023
2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட அறிக்கை நிதியமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு சமர்ப்பிக்கப்பட்டது
இதன்படி, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதனிடையே, வரவு – செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு நடவடிக்கைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மாலை 06.00 மணிக்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


