2021 இல் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் – வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தகவல்!

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படலாம் என தென்னிலங்கை ஊடகமொன்றை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன
கடந்த நல்லாட்சி அரசால் ஒத்திவைக்கப்பட்ட மாகாணசபை தேர்தலை அடுத்த வருடம் பெப்ரவரி அல்லது மார்ச் மாதமளவில் நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் உள்ள 9 மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியாக, தடங்கலாக உள்ள காரணிகள் சட்டத்திருத்தம் மூலம் சீர் செய்யப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.
மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அரசு பரிசீலித்தாலும் நிதி பற்றாக்குறை காரணமாக வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் குறித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|