2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 21 நாட்களுக்கு மட்டுமே நாடாளுமன்றில் விவாதிக்கப்படும்!

2021 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நவம்பர் 17 ஆம் திகதி பிற்பகல் 01.40 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு நவம்பர் 18முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான மூன்றாவது வாசிப்பு நவம்பர் 23 ஆம் திகதிமுதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை 21 நாட்களுக்கு விவாதிக்க நாடாளுமன்ற அலுவல் பற்றிய குழு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
1700 பல்கலைக்கழக வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க 23ஆம் திகதி வரை அவகாசம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக...
இலங்கையின் வீட்டு வாடகை சட்டத்தில் திருத்தம் - நீதி அமைச்சு முன்வைத்த முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங...
மலையகம் -200, “யாழில் மலையகத்தை உணர்வோம்" நிகழ்வு ஆரம்பம்!
|
|