2020 நாடாளுமன்ற தேர்தல் : சானிடைசருக்கான செலவு ஒரு கோடியை தாண்டுகிறது -மஹிந்த தேசப்பிரிய!
Saturday, July 18th, 2020
தேர்தலில் பயன்படுத்தும் சானிடைசருக்கான செலவு ஒரு கோடியை தாண்டியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் வாக்காளர்கள், சானிடைசரை பயன்படுத்தி இரண்டு முறை கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு வாக்காளர் 15 மில்லி லீட்டர் சானிடைசரை பயன்படுத்துவதால் ஒரு வாக்காளர் பயன்படுத்தும் சானிடைசருக்கு ஒரு ரூபாய் செலவாகும்.
இதனடிப்படையில் பொதுத் தேர்தலில் பயன்படுத்தும் சானிடைசருக்காக தேர்தல் ஆணைக்குழு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை செலவிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அடுத்த தைப்பொங்கலுக்குள் அனைத்து பிரச்சினையும் தீருமாம்!
நாட்டில் கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பா...
நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன் - சிறித...
|
|
|


