2017 இல் உள்ளூராட்சி தேர்தல்!

Friday, August 19th, 2016

எதிர்வரும் 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டுப்பகுதியில் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடத்தப்படும் என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தம்மை பொறுத்தவரை, இந்த வருடத்துக்குள் உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டும் என்று எண்ணியபோதும், ஜனாதிபதி, 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதனை நடத்துமாறு பணித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். இந்தநிலையில் புதிய தேர்தல் முறையின்கீழ் நடத்தப்படவுள்ள இந்த தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் தமக்கு பணிப்புரைகளை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: