20 ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த தலைமையில் விசேட கூட்டம்!
Friday, October 9th, 2020
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் சம்பந்தமாக தெளிவுப்படுத்தும் விசேட கூட்டம் ஒன்றை நடத்த பிரதமர் மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு அலரி மாளிகையில் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் நீதியமைச்சர் மொஹமட் அலி சப்றி மற்றும் கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கவுள்ளனர்.
இறுதியாக நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர், 20வது திருத்தச் சட்டம் சம்பந்தமாக தனக்கு தெளிவுப்படுத்தப்படவில்லை என கூறியிருந்தமை காரணமாக பிரதமர் இந்த விசேட கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
Related posts:
போதைப்பொருள் குற்றவாளிகளில் முதன்மை வகிப்பவர்கள் பெண்களே - அமைச்சர் தலதா அத்துக்கோரள!
கொரோனா வைரஸ் : யாழ் மக்களிற்கு அவதானம் அவசியம்!
கந்தக்காடு புனர்வாழ்வுமைய விவகாரம் - விரைவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச...
|
|
|


