2.9 மில்லியன் குடும்பங்களுக்கு நாளை முதல் இலவச அரிசி விநியோகம் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Sunday, March 26th, 2023
நாட்டில் உள்ள 2.9 மில்லியன் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி விநியோகிக்கும் வேலைத்திட்டம் நாளை (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த பெரும்போகத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை அரிசியாக மாற்றி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 02 மாதங்களுக்கு 10 கிலோ கிராம் என்ற அடிப்படையில், இலவச அரிசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களில், முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அமைய இவ்வாறு இலவச அரிசி விநியோகம் இடம்பெறும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
000
Related posts:
தூர நோக்குடைய அரசியல் தலைமையை ஏற்படுத்துவதனூடாகத்தான் தமிழ் மக்கள் தமது உரிமைகளையும் வாழ்வியலையும் ...
கைகளால் தொட்டு உணவுப் பொருட்களை விற்கத் தடை!
யாழ்ப்பாணம் - கொழும்பிற்கிடையில் மேலும் 33 பஸ்கள் சேவையில் - வடமாகாண வீதி போக்குவரத்து அதிகார சபை தெ...
|
|
|


