16 வயதிற்கும் குறைந்த சிறுவர்களை பணிக்கமர்த்துவது தொடர்பில் விசேட நடவடிக்கை முன்னெடுப்பு – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு!
Saturday, July 24th, 2021
16 வயதிற்கும் குறைந்த சிறுவர்களை பணிக்கமர்த்துவது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 16 வயதிற்கும் குறைந்த சிறுவர்களை பணிக்கமர்த்துவது பாரிய குற்றமாகும்.
இவ்வாறான சிறுவர்கள் இருப்பின், அது குறித்து ஆராய்ந்து பணிக்கமர்த்தியவர்களை கைது செய்து வழக்கு தொடர்வது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இது குறித்து பொதுமக்களும் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஓய்வுபெற அனுமதி - பொலிஸ் ஆணைக்குழு!
சேவை காலத்தை நிறைவுசெய்து நாடு திரும்பும் செக் குடியரசு மற்றும் எகிப்து தூதுவர்கள் பிரதமருடன் சந்திப...
சுகாதார சேவையின் புதிய மாற்றத்திற்காக விரிவான கலந்துரையாடல் அவசியம் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கத...
|
|
|


