16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறை கைதிகள் தொடர்பில் அரசாங்கம் அதிரடித் தீர்மானம்!
Sunday, June 4th, 2023
சிறைச்சாலை வளாகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் சிறுவர் குற்றவாளிகளை உடனடியாக அங்கிருந்து வெளியேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சிறுவர் உரிமைகள் தொடர்பான ஜெனீவா குழு இலங்கைக்கு வழங்கிய பரிந்துரைகள், சிறுவர் மற்றும் இளைஞர்கள் தொடர்பான கட்டளைச் சட்டத்தின் புதிய திருத்தங்களுக்கமைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
தற்போது சிறைச்சாலையில் உள்ள சிறுவர்கள் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் நீதி அமைச்சுக்கு அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளது.
இதன்படி, 16 முதல் 18 வயதுக்குட்பட்ட 37 பேர், சிறைச்சாலை வளாகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் பிணை செலுத்த முடியாமல் சிறையில் இருப்பதும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இயற்கை அனர்த்தம் - சில வாரங்களுக்கு முன்னரே எச்சரித்த சர்வதேசம்!
ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டதாக அர்த்தமில்லை - அரச வைத்திய அதிகாரிகள்...
நாட்டில் இதுவரை முட்டைகள் இறக்குமதி செய்யப்படவில்லை - பொய்யான செய்திகளே பரவுகின்றன என வர்த்தக அமைச்ச...
|
|
|


