1,500 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனத்தை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Saturday, October 28th, 2023
நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்ட 1,500 குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனத்தை துரிதப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடுத்த சில நாட்களில் நியமனம் தொடர்பில் குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்படும் என முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்க அதிகாரிகளுடன் நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேர்தல் நடத்துவது தொடர்பில் முக்கிய சந்திப்பு!
யாழ். மாநகர பிரதேசத்தில் டெங்கின் தாக்கம் குறைவு !
பால்மாக்களுக்கான விலைகள் அதிகரிப்பு!
|
|
|


