13, 374 வாக்களிப்பு நிலையங்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது. இதற்காக 13, 374 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
340 உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு 8325 மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்வதற்காக வாக்களிப்பிற்கான அனைத்து அடிப்படை ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தில் தமது ஆள் அடையாளத்தை உறுதிசெய்து அவற்றைப் பெற்றுக்கொள்ளுமாறுதேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி கலந்துரையாடல்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார் - இறுதி திகதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தெர...
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் நிர்வாண நிலையில் ஆணின் சடலம் - சந்தேகத்தின் பேரில் 2 பெண்கள் உட்பட 6 பே...
|
|