12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க வலியுறுத்து!
 Sunday, January 14th, 2024
        
                    Sunday, January 14th, 2024
            
12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், தேவையான தீர்வுகளை எங்களால் மேற்கொள்ள முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு நாடாக நாம் மிகவும் கடினமான முடிவுகளை எடுத்துள்ளோம். இன்று நாடு ஒரு குறிப்பிட்ட நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.
சந்தர்ப்பவாத, அரசியல் கோணத்தில் இருந்து பார்க்காமல் சரியான கண்ணோட்டத்தில் பார்த்தால் உண்மை நிலையைப் புரிந்துகொள்ள முடியும்.
மக்களுக்கு சிரமம் உள்ளது. அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் அதை நிராகரிக்கவில்லை. வீழ்ச்சியுற்ற நாட்டை ஒரேயடியாக மீட்க முடியாது. சிரமங்களிலிருந்து விடுபட, முதலில் ஒரு திட்டம் தேவை. வரி செலுத்த வேண்டிய மக்களை வரி செலுத்த ஊக்குவிக்க வேண்டும்.
12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், தேவையான தீர்வுகளை எங்களால் மேற்கொள்ள முடியாது.
அவர்கள் கடனைச் செலுத்த வேண்டும். மற்றபடி குறைந்த வரி செலுத்தியோ, வரி கட்டாமல் இருந்தோ வரி அதிகம் என்று கூச்சல் போடுவதில் அர்த்தமில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        