10 புகையிரத சேவைகள் ரத்து!

புகையிரத பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாககொழும்பு -கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களில் இருந்து இன்று அதிகாலை முதல் ஆரம்பமாகவிருந்த 10 புகையிரத சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து இன்று அதிகாலை பயணத்தை ஆரம்பிக்கவிருந்த யாழ்தேவி புகையிரதம் மற்றும் தலைமன்னார், மட்டக்களப்பு நோக்கிச் செல்லவிருந்த புகையிரதங்கள் என்பன ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, 4 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சாரதிகள் சங்கத்தினர் உள்ளிட்ட சிலர் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ஐ.நா.பேரவை!
இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி - தமிழக முதல்வருக்கு இந்நிய வெளியுறவ...
22 நாடுகளின் பங்கேற்புடன் நடைபெறும் தென் சீனா கடல் வலய 8 ஆவது ஷென்ஸன் வட்டமேசை மாநாடு இலங்கையில்!
|
|