50 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான முறிகள் வெளியீடு!

Monday, October 14th, 2019


இலங்கை மத்திய வங்கி 50 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான சமுரே வகையான முறிகளை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10 வருடங்களுக்கான சமுரே முறிகள் எதிர்வரும் நொவம்பர் மாதத்தில் வெளியிடவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

வெளியிடப்படும் முறிகளுக்கு 95 சத வீத உத்தரவாதத்தை ஜப்பானிய வங்கி வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறந்த விலையினை பெற முடியும் எனவும் மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.

மலேஷியா பல துறைகளில் இலங்கையுடன் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட ஆவலுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான மலேஷிய தூதுவர் ரன் யங் தாய் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டின் கீழ் அண்மையில் ‘இலங்கை மற்றும் மலேஷியாவிற்கு இடையேயான இரு தரப்பு வர்த்தகம்’ என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கொன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கருத்தரங்கில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மலேஷியாவின் பிரதான வர்த்தக பங்காளர்களான சீனா, ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா, இந்தியா, தாய்வான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் 13 திறந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேஷியா கடந்த ஆண்டில் 247 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக தெரிவித்த அவர் ஏற்றுமதி நடவடிக்கைகளில் இலங்கை அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts: