யுத்தம் தொடர்பில் ஐ.நா தலையிட முடியாது – ரியர் அட்மிரல் சரத் வீரசேகர!
Sunday, August 25th, 2019
நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக நாட்டிற்குள் இராணுவத்திற்கும், தனிநாடு கோரிய புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்திற்கும் இடையில் போரொன்று இடம்பெற்றதே தவிர, அது சர்வதேச மட்டத்திலான ஆயுதப் போரல்ல என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிநாடுகள் தலையிடுகின்றமை குறித்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
உள்நாட்டு போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு மனித உரிமைச் சட்டங்களைப் பிரயோகிக்க முடியாது. கடந்த மூன்று தசாப்த காலமாக நாட்டிற்குள் இராணுவத்திற்கும், தனிநாடு கோரிய புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்திற்கும் இடையில் போரொன்று இடம்பெற்றதே தவிர, அது சர்வதேச மட்டத்திலான ஆயுதப் போரல்ல.
ஆகவே இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச நாடுகளோ தலையிட முடியாது.அத்துடன் இது உள்நாட்டு ஆயுதப்போர் என்பதால் இதனை மனிதாபிமானச் சட்டங்களின் ஊடாக மாத்திரம் அணுக முடியும்.
ஆனால் மனித உரிமைச் சட்டங்களை ஒருபோதும் பிரயோகிக்க முடியாது. இதேவேளை நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இராணுவத் தளபதி ஒருவரின் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்துக்களை வெளியிடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|
|


