மதுபோதையில் சாரதித்துவம்: 8635 சாரதிகள் கைது!

Wednesday, August 14th, 2019


கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.

அதன்படி நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணிநேர காலத்தில் 147 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 8635 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts:

பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கட்டடங்களை புதுப்பித்து மீள் குத்தகைக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண...
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையை நீக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானம் - ஜனாதிபதியின் ஊ...
சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பம் – 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 பரீட்சார்த்திகள் தோற்றுவதாக பரீட்சை திண...

தமது பூர்வீக நிலத்தில் குடியமர நடவடிக்கை எடுத்து தருமாறு கோரி இரணைமாதா நகர் மக்கள் டக்ளஸ் தேவானந்தாவ...
ஜனாதிபதி விசேட அனுமதி - எதிர்வரும் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் யாழ். பல்கலை பணியாளர்களுக்கு தடுப்பூச...
அத்தியாவசிய சேவைகளுக்காக நிறுவன பிரதானிகள் கோரிக்கை விடுத்தால் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்த...