பலாலி விமான நிலையம்: தற்காலிக நீர் விநியோகத்திற்கென 11 கோடி நிதி!
Sunday, September 1st, 2019
பலாலி விமான நிலையத்தின் அடிப்படை அபிவிருத்திப் பணிகள் துரிதமாக பூர்த்தி செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சின் பதில் செயலாளர் திருமதி. மல்காந்தி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
பிராந்திய விமான நிலையத்திற்கு இருக்க வேண்டிய அனைத்து வசதிகளும் இந்த விமான நிலையத்தில் ஏற்படுத்துவதே நோக்கமாகும். விமான நிலையத்திற்கு தற்காலிக நீர் விநியோகத்திற்காக 11 கோடியே 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏனைய அடிப்படை வசதிகளுக்காக சிவில் விமான சேவை அதிகாரசபையும் போக்குவரத்து அமைச்சும் இணைந்து நிதி வழங்குகிறது. பலாலி விமான நிலையம் நாட்டில் அமைக்கப்படும் நான்காவது விமான நிலையமாகும். இது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
Related posts:
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் 23 ஆம் திகதி வரை நீடிப்பு !
பருத்தித்துறையின் அபிவிருத்தி பின்தங்கியமைக்கு காரணமானவர்கள் கூட்டமைப்பினரே - ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்...
இந்திய கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கை ஆரம்பம்!
|
|
|


