பகிடிவதை: 19 மாணவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!
Tuesday, August 20th, 2019
ருகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ருகுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் தலைவர் வெரங்க புஸ்பிக்க டி சில்வா உள்ளிட்ட 19 மாணவர்கள் எதிர்வரும் 2 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை பதில் நீதவான் ஆரிய சேன பனாங்கல இதற்கான உத்தரவை பிறப்பித்தார். ருகுணு பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு வழங்கிய சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை தலைமை பொலிஸ் நிலையத்தில் இந்த மாணவர்கள் ஆஜரான பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இது தொடர்பான விசாரணைகள் மாத்தறை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Related posts:
இவ்வருடத்தில் 370 கிலோ கொக்கெய்ன் - 1,415 கிலோ ஹெரோயின் மீட்பு - , 37,819 சந்தேகநபர்கள் கைதானதாகவும்...
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பு - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...
மாணவர்களின் பரீட்சையை குழப்பும் ஹர்த்தால் எதற்கு? – நாளை பரீட்சைகள் நடைபெற வேண்டும் என பொற்றோர் வலிய...
|
|
|
பனம்பொருள் கைப்பணி உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேலணை பிரதேச சபையில் ஈ.பி.டி.பி...
பி.சி.ஆர் சோதனை குறைக்கப்படாது - சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தெரிவி...
நாளொன்றுக்கு 4 தொன் சுத்திகரிப்பு நிலையம் - சீன முதலீடாக இலங்கையில் நிறுவப்படும் என இலங்கைக்கான ச...


